Wednesday, June 24, 2020

அப்துல்கலாம் ஐயா எல்லா மேடையிலும் கூறும் ஓர் அவரது அனுபவ கதை

உன்னுடைய வாழ்க்கையிலே நீ என்னவாக வரவேண்டும் என திட்டம் இட்டிருக்கின்றாயோ அது போல் உனக்கு நடக்கவில்லையெனில் இந்த வாழ்க்கை உன்னை வைத்து மிகப்பெரிய நல்லதோர் திட்டத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டு உன் முயற்சிகளை வளர்த்துக்கொண்டிரு.

Sunday, October 14, 2018

நிலவின் காதல்















நிலவு அதன் அழகு வர்ணிக்கவே முடியாது. அந்த நிலா பூமியை காதலிக்கின்றது. ஆனால் அது பூமிக்கே தெரியாமல் இருக்கிறது. ஏனென்றால் பூமியை பொறுத்த வரைக்கும் சூரியன் தான் எல்லாமே. ஒரு நாள் இந்த பூமி சரியா கஸ்டப்படுகிறது. அழுதுகிட்டே புலம்புது. 

எங்க பார்த்தாலும் இருட்டாவே இருக்கு. அப்போது இந்த நிலா இருக்கே அது தன்னுடைய வெளிச்சத்தை காட்டி தன்னுடைய காதலை உணர்த்துகிறது. அத பார்த்து பூமியோட கண்ணில் சிறு கண்ணீர்த்துளி.  அதற்கு பிறகு ஒரு அழகான சிரிப்பு. 

கட்டி அணைத்து அழ நினைக்கின்றது. ஆனால் இதெல்லாம் முடியாது என்று தெரிந்த நிலவு முழு நிலவாக மாறி வெளிச்சம் கொடுத்து நான் உன்னை காதலிக்கிறேன். கடைசி மூச்சு மட்டும் உன்னை தான் காதலிப்பேன். உன்னை மட்டும் தான் சுத்தி வருவேன் என்று சொல்கிறது. இங்கு தான் அன்பும், நட்பும், காதலும் தொடங்குகின்றது.

Thursday, December 7, 2017

என் தோழனுக்கு

என் தோழனுக்கு
வெகுளியான ஓர் போர் !
வெளிச்சமான ஓர் அர்த்தம் !
என் கவலையை அழகாக்கும்,
நீ !ஓர் கண்ணாடி....

என் தோல்விகளை
உன் தோல்விகளாக்கினாய்,
உன் வெற்றியை
என் வெற்றியாக்கினாய்....

ஆயிரம் உறவு இங்க இருந்தாலும்
அருமையான ஓர் உறவு
தோழமை....

ஒரே பலூனில் ஊதிய காற்றுகளானோம்,
அதை பிரித்தால் வெறும் வெற்றிடமாவோம்,
எங்கோ இருந்து வந்த நதிகள் கடல்களானோம்
அதை பிரித்தால் வெறும் உப்புகள் ஆவோம்….

என் உணர்வுகளின் உரிமம் உன் உருவம்
உன் பெயரின் முதல் எழுத்து சொல்லும் போது தான் தெரியும்
நாம் வேறு குடும்பம் என்றே......

நம் நட்பை பற்றி சொல்ல
ஒரு நாவல் எழுதிட வேணும்
அதை படிக்க ஒரு யுகமே வேணும்
இப்படிக்கு இரு தேகத்தின் ஒரு உயிர்................ 

நட்பின் வண்ணம்


மனிதன் என்ற வானில் எங்கோ தொலைந்த அன்பு என்ற மழையில்
மறைந்த துன்பம் என்ற சூரியன் மறைய, நட்பு என்ற மேகத்தில் ஒளிந்திருக்கும் வாழ்வு என்ற வானவில்லைத் தேடி தேடி என் தேடல் என்ற நெடிய பயணம்.

நண்பனாசான்

அந்நியனாய் வந்தேன் உன் நண்பனாக்கினாய்
பிடிவாதமாய் இருந்தேன் விட்டுக்கொடுப்பதை கற்பித்தாய்

மதங்களை விட மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினாய்
தேர்வு எழுத தடுமாறிய போது நம்பிக்கையை ஊட்டினாய்

பல தென்மாவட்ட இளைஞர்களின் பாலகன் ஆனாய்
பலருக்கு நீ ஒரு நம்பிக்கை நட்சத்திர மானாய்

நீ பெற்ற டீயுஷன் பணத்தை எங்களுக்கு செலவு செய்தாய்
நீ பெற்ற ஊதியத்தையும் எமக்கு தாரை வார்த்தாய்

விவேகானந்தர் கார்ல் மாக்ஸ் சேகுவரா, ஹோஷோவையும் பயின்றாய்
குரானைப் போல் கீதை பைபிள் ஜெயினிசம் வேதாந்தமும் பயின்றாய்

அனைத்து சாஸ்திரங்களை பயின்ற நீ வானத்தின் ஓசோன்
உன் அனுபவத்தால் உணர்த்தும் எங்கள் ஆன்மிக ஆசான் 

நட்பு

நட்பு


நாம் இத்தனை காலங்கள்
ஒன்றாக இருந்தோம்!

ஆசிரியர் பாடம் நடத்தும் போது
பல சேட்டைகளை செய்தோம்!

சில நினைவுகளுடன் பல
நாட்கள் வாழ்ந்தோம்!
பிரிவு என்னும் வலி வருவதையும்
மறந்து....!

ஆனால்
ஒரு நாள் பிரிவு என்னும்
அந்த வலி நம் மனதில் இடி
போல் வந்து பாய்ந்தது!

அந்த நொடியில் வேறு வழியில்லாமல்
அடுத்த இலக்கை அடைய வேண்டும்
என்ற நிபந்தனையில்

உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன்

நம் நட்பின் மறக்க முடியாத
நினைவுகளுடன்!!!!!!

நண்பனின் நட்பு

நண்பன் சந்தன மரம் 

மரமாய் இருந்தாலும் மணக்கும்
மரம், நண்பன் நல்ல குணம்போல,
அரைத்தால் சந்தனக்குழம்பு மணக்கும்
நண்பன் நண்பனுக்கு நட்பால் தரும்
நலங்கள்போல், எரித்தாலும் மணக்கும்
மரம், நண்பனின் நட்பின் தியாகம் போல்.