![]() |
நிலவு அதன் அழகு வர்ணிக்கவே முடியாது. அந்த நிலா பூமியை காதலிக்கின்றது. ஆனால் அது பூமிக்கே தெரியாமல் இருக்கிறது. ஏனென்றால் பூமியை பொறுத்த வரைக்கும் சூரியன் தான் எல்லாமே. ஒரு நாள் இந்த பூமி சரியா கஸ்டப்படுகிறது. அழுதுகிட்டே புலம்புது.
எங்க பார்த்தாலும் இருட்டாவே இருக்கு. அப்போது இந்த நிலா இருக்கே அது தன்னுடைய வெளிச்சத்தை காட்டி தன்னுடைய காதலை உணர்த்துகிறது. அத பார்த்து பூமியோட கண்ணில் சிறு கண்ணீர்த்துளி. அதற்கு பிறகு ஒரு அழகான சிரிப்பு.
கட்டி அணைத்து அழ நினைக்கின்றது. ஆனால் இதெல்லாம் முடியாது என்று தெரிந்த நிலவு முழு நிலவாக மாறி வெளிச்சம் கொடுத்து நான் உன்னை காதலிக்கிறேன். கடைசி மூச்சு மட்டும் உன்னை தான் காதலிப்பேன். உன்னை மட்டும் தான் சுத்தி வருவேன் என்று சொல்கிறது. இங்கு தான் அன்பும், நட்பும், காதலும் தொடங்குகின்றது.