Thursday, December 7, 2017

நண்பனாசான்

அந்நியனாய் வந்தேன் உன் நண்பனாக்கினாய்
பிடிவாதமாய் இருந்தேன் விட்டுக்கொடுப்பதை கற்பித்தாய்

மதங்களை விட மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினாய்
தேர்வு எழுத தடுமாறிய போது நம்பிக்கையை ஊட்டினாய்

பல தென்மாவட்ட இளைஞர்களின் பாலகன் ஆனாய்
பலருக்கு நீ ஒரு நம்பிக்கை நட்சத்திர மானாய்

நீ பெற்ற டீயுஷன் பணத்தை எங்களுக்கு செலவு செய்தாய்
நீ பெற்ற ஊதியத்தையும் எமக்கு தாரை வார்த்தாய்

விவேகானந்தர் கார்ல் மாக்ஸ் சேகுவரா, ஹோஷோவையும் பயின்றாய்
குரானைப் போல் கீதை பைபிள் ஜெயினிசம் வேதாந்தமும் பயின்றாய்

அனைத்து சாஸ்திரங்களை பயின்ற நீ வானத்தின் ஓசோன்
உன் அனுபவத்தால் உணர்த்தும் எங்கள் ஆன்மிக ஆசான் 

நட்பு

நட்பு


நாம் இத்தனை காலங்கள்
ஒன்றாக இருந்தோம்!

ஆசிரியர் பாடம் நடத்தும் போது
பல சேட்டைகளை செய்தோம்!

சில நினைவுகளுடன் பல
நாட்கள் வாழ்ந்தோம்!
பிரிவு என்னும் வலி வருவதையும்
மறந்து....!

ஆனால்
ஒரு நாள் பிரிவு என்னும்
அந்த வலி நம் மனதில் இடி
போல் வந்து பாய்ந்தது!

அந்த நொடியில் வேறு வழியில்லாமல்
அடுத்த இலக்கை அடைய வேண்டும்
என்ற நிபந்தனையில்

உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன்

நம் நட்பின் மறக்க முடியாத
நினைவுகளுடன்!!!!!!

நண்பனின் நட்பு

நண்பன் சந்தன மரம் 

மரமாய் இருந்தாலும் மணக்கும்
மரம், நண்பன் நல்ல குணம்போல,
அரைத்தால் சந்தனக்குழம்பு மணக்கும்
நண்பன் நண்பனுக்கு நட்பால் தரும்
நலங்கள்போல், எரித்தாலும் மணக்கும்
மரம், நண்பனின் நட்பின் தியாகம் போல்.

நட்பெனும் காவியம்

எந்தன் ஆருயிர் தோழியே அறிவாயா? 


என் வாழ்வில் வந்த வரம் நீ என? 
ஒன்றாய் உழைத்த நாட்களில் 
ஒரு கணப்பொழுது கிடைக்கப்பெறின் 
ஓராயிரம் கதை பேசினோம் 

இதயத்தில் வலி இருப்பின் அதற்கு 
உன் இதமான வார்த்தைகள் மருந்தாயின 
உந்தன் பாசமும் நேசமும் எந்தன் 
வாழ்வை ஒளிமயமாக்கின 
என் வாழ்வில் கவிதையான நட்பே 

வருடங்கள் பல உருண்டோடிவிட்டது 
வேலை மாறி வேறிடம் நான் வந்து 
இடம் மாறினாலும் என் இதயம் மாறவில்லை 
நாம் பகிர்ந்து கொண்ட பாச தருணங்கள் 
அழியா ஓவியமாய் என் மனதில் என்றென்றும்

என்றும் நினைத்ததில்லை இப்படி 
நாட்கள் பல பேசாதிருப்போமென! 
ஒவ்வொரு முறை உனை அழைத்தபோதும் 
நேரமில்லை என்றாய் எனை அழைக்க 
உண்மை என அறிந்தும் மனதில் சிறு வலி 

குறுஞ்செய்தி அனுப்பினேன் நொடி நேரம் 
உனக்கு கிடைக்குமென நினைத்து 
அதற்கும் பதில் இல்லை எனும்போது!! 
அறிவேன் உனக்கு அலுவல் பல எனினும் 
நேரமின்மை எனக்கும் தானே! 

அழைக்க வில்லை எனினும் 
மறக்கவில்லை என்றாய் நீ 
பேசவில்லை என்றாலும் 
நான் உந்தன் நினைவின்று 
அகல வில்லை என்றாய் நீ 

இருப்பினும் அன்பு தோழியே! 
அவ்வப்போது ஒரு வார்த்தை 
அலை பேசியாயினும் அன்றி 
அலை செய்தியாயினும் சரி 
வந்தால் மகிழ்வேன் நட்பே!

நட்பு

நட்பு என்பது

கண்களில் இருந்து வரும்
கண்ணீர் அல்ல...
கண்களோடு இணைந்திருக்கும்
கண் இமை போன்றது!

நண்பேன்டா

நண்பேன்டா

மழை செய்யும் மகத்தான சேவைக்கு
மனிதன் கைமாறு செய்ய முடியாது..!
மலையளவு உன் மறைமுக உதவியே
மதிப்பு சொல்ல எவராலும் முடியாது..!
சிலையாய் இருக்கும் கடவுளே கூட
சில நேரம் நினைக்க முடியாது..!
அலையாய் தொடரும் உன் நட்பே
அனு அளவும் மறக்க முடியாது..!
நண்பேன்டா..!!!

நண்பன்-நட்பு

மெழுகுவத்தி எரியும் ஒளி பரப்பும் கரைந்துருகி மறையும் வரைநண்பன் நட்பால் தன் நண்பன் வாழ்வில்ஒளி பரப்பி நிற்பான் தன் உயிருள்ளவரை